சேலத்தில் போக்குவரத்து விதிமுறை மீறல்.. வன அதிகாரி போலீசுடன் கடும் வாக்குவாதம்.. பாய்ந்த ஆக்சன்
சேலம்: சேலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுட்டதாக வனத்துறை அதிகாரிக்கு ரூ.2,700 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
ஒரு வழிப்பாதையில் ஹெல்மெட் அணியாமல், டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வாராமல் வாகனம் ஓட்டிய வன அதிகாரிக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

சேலம் அஸ்தம்பட்டி ஆத்துக்காடு பகுதியை சேர்ந்த 55 வயதாகும் சரவணன், தர்மபுரி மாவட்டம் அரூரில் உதவி வன பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் சேலம் குகையில் உள்ள ஒரு தனியார் மருத்துமவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திங்கள்கிழமை காலை மனைவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் அவரை அழைத்துக் கொண்டு சரவணன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டார். அங்கிருந்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த அவர் ஒருவழிப்பாதையில் போக்குவரத்து விதியை மீறி மோட்டார் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக சாலையில் சென்ற பெண் மீது உதவி வன அலுவலர் சரவணனின் இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக மோதிவிட்டது. இதனால் அந்த பெண் நிலைதடுமாறி சாலையில் கீழே தவறி விழுந்தார். உடனே சரவணன் தனது மோட்டார் சைக்கிளை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அந்த பெண்ணை தூக்க முயன்றுள்ளார்..
இந்த சம்பவத்தை கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து விரைந்து சென்றனர். அப்போது அவர்கள், ஒருவழிப்பாதையில் இருசக்கர வாகனத்தில் எப்படி வரலாம்? என்று உதவி வன அதிகாரி சரவணனிடம் கேள்வி கேட்டனர். இதையடுத்து அவரின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அதற்கு சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது சரவணன் மற்றும் போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்திய போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு எடுத்து வந்தார்கள். பின்னர் ஹெல்மெட் அணியாதது, ஒருவழிப்பாதையில் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறிய காரணத்தால் ரூ.2,700 அபராதத்தை அவருக்கு போலீசார் விதித்தார்கள்.
இதையடுத்து உதவி வன பாதுகாவலர் சரவணன், போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக அங்கிருந்த போலீசாரிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டுமாறு கூறி அதற்குரிய ரசீதை உதவி வன பாதுகாவலரிடம் போலீசார் வழங்கினர். பின்னர் அவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications