செங்கம் அருகே மணல் அள்ளியவர் மர்ம மரணம்- வனத்துறை ஊழியர் மீது சரமாரி தாக்கு- வாகனம் தீ வைப்பு!!
செங்கம் அருகே திருமலை என்பவரின் மர்ம மரணத்துக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் வனத்துறை ஊழியர் சரமாரியாக தாக்கப்பட்டார்.
திருவண்ணாமலை: செங்கம் அருகே மணல் அள்ளிய திருமலை என்பவர் வனத்துறை ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக பதற்றம் ஏற்பட்டுள்ளது. திருமலையின் மரணத்துக்கு காரணம் என கருதப்படும் வனத்துறை ஊழியர் தாண்டவராயனை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். வனத்துறைக்கு சொந்தமான இருசக்கர வாகனத்துக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டாது.
செங்கம் அருகே மேல்புழுதியூர் வனப்பகுதியில் சந்தனகவுண்டன் புதூரைச் சேர்ந்த திருமலை என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மணல் அள்ளும்போது வனத்துறையினர் தாக்கியதால் திருமலை இறந்தார் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

இதனையறித்து மேல்புழுதியூர் வனப்பகுதிக்கு பொதுமக்கள் திரண்டனர். அங்கு திருமலை இறந்து கிடந்ததை கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரது மரணத்துக்கு காரணம் என கூறி வனத்துறை ஊழியர் தாண்டவராயனை சரமாரியாக தாக்கினர்.
பெண்கள் தாண்டவராயனை கீழே தள்ளிவிட்டு மிதித்தனர். போலீசார் தாண்டவராயனை பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றனர். ஆத்திரம் தணியாத பொதுமக்கள் வனத்துறைக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்துக்கு தீ வைத்து எரித்தனர். இதனால் செங்கம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications