சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமியின் மகன் அமெரிக்காவில் சாலை விபத்தில் மரணம்
சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் சமூக சமத்துவப் படை கட்சியின் தலைவருமான சிவகாமியின் இளைய மகன் அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் சிவகாமி கடும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் மூழ்கியுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சிவகாமிக்கு மொத்தம் 2 மகன்கள். மூத்த மகன் பெங்களூரில் பணியாற்றி வருகிறார். 2வது மகன் சுனந்த் ஆனந்த் (24). இவர் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் படித்தவர். அதன் பின்னர் 2 ஆண்டு எம்.எஸ் படிப்புக்காக அமெரிக்காக சென்றார். அங்கு கிளெம்சன் பல்கலைக்கழகத்தில் படித்த அவர் அங்கேயே வேலையும் பார்த்து வந்தார்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இரவு காரில் போய்க் கொண்டிருந்தபோது திடீரென கார் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஆனந்த் உயிரிழந்துள்ளார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications