முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தி விபத்தில் பலி!
திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி வைகுண்டத்தின் பேத்தி திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 26.
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி வைகுண்டத்தின் பேத்தி திருச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 26.
மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி வைகுண்டத்தின் மகன் கலைவாணன் ஆவர். மருத்துவரான இவர் ஆலடி அருணாவின் நினைவு நாளையொட்டி நாளை நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்துக்கு சென்னையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டார்.

கலைவாணன் காரை தானே ஓட்டியுள்ளார். இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த கலைவாணன், அவரது மனைவி பாலாம்பிகை மகள் பிரியதர்ஷினி அவரது ஒன்றரை மாத குழந்தை அத்வைதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 26 வயதான பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.பிரியதர்ஷினியின் உடலை பார்த்து ஆலடி அருணாவின் மகளும் எம்.எல்.ஏ.வுமான பூங்கோதை கண்ணீர் விட்டு கதறி அழுதார். நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது நடந்த இந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications