நெல்லை மருத்துவமனையில் திடீர் "ஃபவுன்டைன்".. நோயாளிகள் அவதி.. அதிகாரிகளுக்கோ ஷாக்!
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்ைசப் பிரிவில் திடீர் என நீர் ஊற்று தோன்றியுள்ளதால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் திகைத்து போய் உள்ளனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் நோயாளிகளுக்கு கீழ்தளத்தில் தனிபிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவில் தினமும் ஏராளமானோர் சிகி்ச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லையில் பெய்யும் கன மழை காரணமாக மாலை திடீரென நுண்கதிர் சிகிச்சை பிரிவின் கீழ் பகுதியில் தரைதளத்தில் நீ்ர் ஊற்று தோன்றி அறை முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதை பார்த்த அங்குள்ள பணியாளர்கள் திகைத்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் சிகி்ச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பல்கலைகழக டீன் சித்தி அத்திய முனைவரா கூறுகையில், நெலலை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி கேன்சர் நோயாளிகளுக்கு கட்டிடத்தின் கீழ் பகுதியில் (அன்டர்கிரவுண்ட்) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை மழைக்காலத்தில் இங்கு தண்ணீர் ஊற்று ஏற்பட்டதில்லை.
ஆனால் இப்போது திடீரென நீர் ஊற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அஙகு சிகிச்சை அளிப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த கருவிகள் பாதுகாக்கப்பட்டது. தற்போது தண்ணீரை வெளியேற்றியதுடன் வருங்காலத்தில் இது போன்று நிகழாமல் இருக்க பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?













Click it and Unblock the Notifications