இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு
இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: இலவச பஸ் பாஸ் தொடர்ந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலவச பஸ் பாஸ் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.
தமிழகம் முழுக்க பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதால் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இந்த திடீர் போக்குவரத்து கட்டண உயர்வால் பொதுமக்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

பஸ் கட்டண உயர்வால் இலவச பஸ் பாஸ் திட்டம் ரத்து செய்யப்படுமா என்று சந்தேகிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து துறை இதற்கு பதில் அளித்து இருக்கிறது.
அதன்படி ''பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து பஸ் பாஸ் வழங்கப்படும். பேருந்து கட்டணம் மாற்றப்பட்டாலும் பஸ் பாஸ் திட்டத்தில் மாற்றம் இல்லை'' என்று தெரிவித்துள்ளது.
மேலும் ''அரசு கல்லூரி மாணவர்களுக்கும் பாஸ் வழங்கப்படும். ஆனால் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவிகித கட்டண சலுகை மட்டும் வழங்கப்படும்'' என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை 22,66,483 பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு இருப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications