மதுரை மக்களுக்கு மாஸான செய்தி.. இனி 24 மணி நேரமும் விமான சேவை! இனி நள்ளிரவிலும் ஜாலியா பறக்கலாம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தென்மாவட்டங்களுக்கு முக்கிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், மதுரை ஏர்போர்ட் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த 2020 முதல் இரு ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாகச் சர்வதேச விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஆனால், அதன் பிறகு வேக்சின், தடுப்பு பணிகள் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்ட நிலையில், மீண்டும் பழையபடி விமானச் சேவை ஆரம்பித்துவிட்டது.

 விமான சேவை

விமான சேவை

உலகளவிலும் கூட விமானத் துறையில் இந்தியா வளர்ந்து வரும் முக்கிய நாடாகவே இருக்கிறது. நமது நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டும் விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்தே வருகிறது. இதன் காரணமாக விமானத் துறைக்கு மத்திய அரசு கூடுதல் கவனம் கொடுத்து வருகிறது. உதய் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விமானச் சேவையை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

 மத்திய அரசு

மத்திய அரசு

நாட்டில் முதற்கட்ட நகரங்களில் ஏற்கனவே விமானச் சேவை சிறப்பாக இருக்கும் நிலையில், அடுத்தகட்ட நகரங்களுக்கும் விமானச் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக மதுரை ஏர்போர்ட் உள்ளது. 40 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுரை விமான நிலையம், தென் மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான ஏர்போர்ட்டாக இருக்கிறது.

 மதுரை ஏர்போர்ட்

மதுரை ஏர்போர்ட்

மதுரை ஏர்போர்ட் இப்போது உள்நாட்டு விமான நிலையமாக உள்ள சூழலில் இதை, சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மதுரை ஏர்போர்ட்டில் இருந்து சில சர்வதேச நகரங்களுக்கு விமானங்கள் இப்போதே இயக்கப்பட்டு வந்தாலும் மதுரைக்குச் சர்வதேச விமான நிலையம் என்ற அந்தஸ்து இல்லை. இதனால் அதைச் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விரிவாக்கம்

விரிவாக்கம்

மத்திய அரசு இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்காத நிலையில், மதுரை ஏர்போர்ட்டை விரிவுபடுத்தும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. முதற்கட்டமாக ஏற்கனவே 15 கிமீ தொலைவுக்குச் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கிவிட்டது. அதேபோல ஓடுதளத்தின் நீளத்தை 2 கிலோமீட்டராக அதிகரிக்க வேண்டியுள்ள நிலையில், அதற்கான நில எடுப்பு பணிகளும் முடிந்துள்ளன. ரன்வே நீளத்தை அதிகப்படுத்துவதால் மதுரை -- திருமங்கலம் ரிங்ரோட்டை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 24 மணி நேரமும்

24 மணி நேரமும்

மதுரை விமான நிலையத்திற்கு இப்போது ஒவ்வொரு நாளும் பல விமானங்கள் வந்து செல்கின்றன. உள்நாட்டு விமானங்கள் மற்றும் இலங்கை, துபாய், சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானச் சேவை உள்ளது. இப்படிப் பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும் கூட மதுரை ஏர்போர்ட் 24 மணி நேரமும் செயல்படுவதில்லை. காலை 6:30 மணி முதல் இரவு, 9 மணி வரை மட்டுமே மதுரை ஏர்போர்ட் இயங்குகிறுத. இதற்கிடையே மதுரை ஏர்போர்டை 24 மணிநேரமும் செயல்படும் விதமாகத் தரம் உயர்த்துவதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்தது.

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

அதன்படி வரும் ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமானச் சேவை தொடங்கப்படும் என்று மதுரை ஏர்போர்ட் இயக்குநர் கணேசன் அறிவித்துள்ளார். அதற்கேற்ப அனைத்து பிரிவுகளிலும் கூடுதல் ஊழியர்கள், விமான நிலைய பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24 மணிநேரமும் விமானம் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் மதுரைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+