நெல்லையில் கொட்டப்படும் கேரள மாநில கழிவுகள்... அவதியுறும் மக்கள்!
கேரளாவில் இருந்து நெல்லையில் குப்பைகள் டன் டன்னாக கொட்டப்படுவதால் பொதுமக்கள் தொற்று நோய் பயத்தில் உள்ளனர்.
நெல்லை: கேரளாவில் இருந்து நெல்லை அருகே லாரிகளில் கொண்டு வந்து பல டன்கள் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் தொற்றுநோய் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், குருவன்கோட்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளன.

இந்த இரண்டு கிராமங்களுக்கு இடையிலுள்ள மானூர் கால்வாய் பகுதியில் கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் இருந்து கழிவுகள் டன் டன்னாக லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. மேலும், இந்தக் குப்பைகளை கொட்டும் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கழிவுகளில் உள்ள மின் வயர்கள், பிளாஸ்டிகளை எரிப்பதால் அதிலிருந்து கிளம்பும் நச்சு புகையால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதால் குப்பைக் கழிவுகளிலிருந்து தொற்றுநோய் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் இரவில் அப்பகுதிக்கு குப்பைகளைக் கொட்ட வந்த லாரிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஓப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications