உடுமலை அருகே குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை
திருப்பூர்: உடுமலை அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையை அடுத்துள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு நவீனா, குகன் ஆகிய இரு குழந்தைகள் இருந்தனர். குழந்தைகள் இருவருக்கும் காது கேளாதக் குறைபாடு இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கலைச்செல்வி கடந்த சில நாள்களாக வேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை எழுந்த கலைச்செல்வி, வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றுப் பகுதிக்குச் சென்றார். இரு குழந்தைகளையும் பெரிய கல்லுடன் கயிற்றினால் கட்டி, கிணற்றுக்குள் தூக்கி வீசியுள்ளார். அதன் பின்னர், கயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார். இதில், மூவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
காலையில் எழுந்த செல்வராஜ் தனது மனைவி, குழந்தைகளைத் தேடியபோது, அவர்கள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
உடுமலை போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications