ஜி ஸ்கொயர்..ரூட் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள்..அண்ணாநகர் எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு
சென்னை: நாட்டில் பல பகுதிகளில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ மோகன் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள கமலாலயத்தில் திமுக பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அதில், திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரின் சொத்துப் பட்டியல்கள் வெளியாகின.
சுமார் 1.30 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சொத்துப் பட்டியல் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை முதலே ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50ற்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலை ஜி ஸ்கொயர் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ மோகன், அவரது மகன் கார்த்திக் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இதே மோகன் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெறும் போது மீண்டும் திமுக எம்எல்ஏ மோகன் வீட்டில் ரெய்டு மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications