எங்கள் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை.. அண்ணாமலை கூறுவது பொய்.. ஜிஸ்கொயர் விளக்கம்
சென்னை: எங்கள் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு ஏதும் செய்யப்படவில்லை என ஜிஸ்கொயர் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அது போல் எங்கள் நிறுவனத்திற்கும் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜிஸ்கொயர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஜிஸ்கொயர் நிறுவனம் திமுகவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி வந்தார். மேலும் அந்த நிறுவனத்திற்கு ரூ 38 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
மேலும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தி வரும் நிலையில் ஜிஸ்கொயர் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஜிஸ்கொயர் விளக்கம்: இதுகுறித்து ஜிஸ்கொயர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பாவது: ஜிஸ்கொயர் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. அது போல் அண்ணாமலை குறிப்பிட்டது போல் அதிக அளவிலான நிலங்களை கையகப்படுத்தவும் இல்லை.
படித்த தலைவர்: அண்ணாமலையின் செயலால் எங்கள் நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பு சிதைந்துள்ளது. படித்த தலைவர் இது போன்ற கருத்துகளை கூறியதால் அதை மக்கள் நம்பும் ஆபத்து உள்ளது. மேலும் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கும் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்களுடைய கட்டுப்பாட்டு எங்கள் நிறுவனம் இல்லை.
ஜோடிக்கப்பட்ட புகார்: எங்கள் நிறுவனத்திற்கு ரூ 38, 827.70 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறிய தகவலும் தவறானது. உண்மைக்கு புறம்பானவை, அடிப்படை ஆதாரமற்றவை. அனைத்துமே ஜோடிக்கப்பட்டவையாகும். எங்கள் நிறுவனம் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்தின் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. எங்கள் நிறுவனம் , பங்குதாரர்களின் திட்டங்களை தவறான தகவல்களை மதிப்புகளுடன் அண்ணாமலை சித்தரித்துள்ளார்.

கூட்டு முயற்சி: எங்களது பல கட்டுமான திட்டங்கள் பிற நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தவறான முறையில் எங்கள் நிறுவனம் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக நம்ப வைக்கும்படி ஜோடிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஜிஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications