வாணியம்பாடியில் கேஸ் வெடித்து 6 வீடுகள் நாசம்.. லட்சக்கணக்கான பொருட்கள் கருகின
கேஸ் வெடித்து 6 வீடுகள் கருகியதால் லட்சக்கணக்கான பொருட்களும் எரிந்தன.
வாணியம்பாடி: வாணியம்பாடியில் வீடு ஒன்றில் சிலிண்டர் வெடித்ததில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து கருகின.
கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமு. இவரது வீட்டில் திடீரென சிலிண்டரில் இருந்து கேஸ் கசிந்தது. இதனால் அவரது வீடு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.

மளமளவென எரிந்த தீயானது காற்றின் வேகம் காரணமாக பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதில் 6 வீடுகளும் பற்றி எரிய தொடங்கின. இதன் காரணமாக அந்த 6 வீட்டில் இருந்து எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாயின.
இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத்துறை, மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீ விபத்து சம்பவம் நடைபெற்றது குறித்து காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா தனது நிர்வாகிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.












Click it and Unblock the Notifications