சீட்டு தராத கோபம்.. அதிமுகவுக்கு தாவுகிறார் செஞ்சி ராமச்சந்திரன்

கடலூர், விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது திமுகவின் செல்வாக்கு மிக்க மாவட்டச் செயலராக வலம் வந்தவர் செஞ்சி ராமச்சந்திரன்.
திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டபோது செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் உள்ளிட்டோர் வெளியேறி மதிமுக உருவாகக் காரணமாக இருந்தவர். பின்னர் எல்.கணேசனுடன் சேர்ந்து திமுகவுக்கே செஞ்சி ராமச்சந்திரன் தாவினார்.
ஆனால் எல். கணேசனுக்கு கொடுக்கப்படும் மரியாதை தமக்கு கிடைப்பதில்லை என்பது செஞ்சியாரின் நீண்டகால ஆதங்கமாம். அத்துடன் தற்போதைய லோக்சபா தேர்தலில் கனிமொழி பரிந்துரையின் பேரில் கடலூர் லோக்சபா தொகுதிக்கு சீட்டு கேட்டிருந்தார் செஞ்சி ராமச்சந்திரன். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ளாராம் செஞ்சி ராமச்சந்திரன்.
அத்துடன் அவரை எப்படியும் அதிமுகவில் இணைத்துவிடுவதற்கு ஆரணி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் ஏழுமலையும் முயற்சித்து வருகிறாராம்.
இதனால் இன்று தமது ஆதரவாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்துகிறாராம் செஞ்சி ராமச்சந்திரன். இன்றைய கூட்டத்தின் முடிவில் அதிமுகவுக்கு தாவுவதாக செஞ்சி ராமச்சந்திரன் அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications