வேலூர்: நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கி சிறுமி பலி
வேலூர்: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெல் கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி 5 ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பத்தூர் அருகே உள்ள மேற்கத்தியனூரை சேர்ந்தவர் விவசாயி சிவக்குமார். இவரது 10 வயது மகள் ஜோதிகா புதுப்பட்டு தொடக்க பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிவக்குமார் தனது நிலத்தில் இன்று இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்யப்படுவதை ஜோதிகா அருகில் நின்று பார்த்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமி ஜோதிகா அணிந்திருந்த ஆடை நெல் அறுவடை இயந்திரத்தில் சிக்கியுள்ளது. இதில், ஜோதிகா நெல் அறுவடை இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டு கை, கால்கள் துண்டான நிலையில் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சிவக்குமாரும் கிராமத்தினரும், நெல் அறுக்கும் இயந்திரத்தை உடனே நிறுத்தி சிறுமி ஜோதிகாவின் உடலை மீட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் மற்றும் அதன் ஓட்டுனரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications