நாளை வேலை நிறுத்துப் போராட்டத்தில் தமாகா பங்கேற்காது... ஜி.கே.வாசன் திட்டவட்டம்!
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமாகா பங்கேற்காது என்று ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமாக பங்கேற்காது என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
வறட்சி நிவாரணம், விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 41 நாள்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வரும் 25-ஆம் தேதி விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் , விவசாயிகள் போராட்ட்த்தை கைவிட்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் கோரிக்கைகளை தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்ததை அடுத்து போராட்டத்தை மே 25-ஆம் தேதி வரை தற்காலிகமாக விவசாயிகள் ஒத்திவைத்து நேற்று இரவு ரயில் மூலம் தமிழகத்துக்கு கிளம்பினர்.
இந்நிலையில் நாளை திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். அதேபோல் பாஜகவும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்!












Click it and Unblock the Notifications