மக்கள் நல கூட்டணிக்கே திரும்பிய தமிழருவி மணியன்- சட்டசபை தேர்தலில் ஆதரவு
திருச்சி: தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். மக்கள் நல கூட்டு இயக்கம் தொடங்கிய போது மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து இருந்த காந்திய மக்கள் இயக்கம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியேறியது.
தற்போது மீண்டும் மக்கள் நலக்கூட்டணிக்கே ஆதரவு தரப்போவதாக கூறியுள்ளார் தமிழருவி மணியன். அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

எதிரி கட்சிகள்
'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வரி சீர்திருத்தம் முக்கியமானது. எனவே, நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சரக்கு சேவை வரி மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், எதிரி கட்சிகள் போல இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும்.

பீகார் தேர்தல் முடிவு
மதசகிப்பின்மை, மாட்டிறைச்சி விவகாரம், வி.கே.சிங்கின் தரக்குறைவான பேச்சு ஆகியவற்றால் பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு முழுவதும் களம் அமைந்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மைக்கு மாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் அதற்கு எவ்வளவு பெரிய விளைவை சந்திக்க வேண்டும் என்பதை பிகார் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன.

வெள்ளை அறிக்கை
தமிழகத்தில் வெள்ளச் சேதங்களுக்கு காரணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான். தமிழகத்தில் மழை வெள்ளம் தடுப்பு பணி, வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு என பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயல்கள் எதுவும் நடக்கவில்லை. வெள்ளத்தடுப்பு பணி, மேலாண்மை திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

நிதி ஒதுக்கீடு தேவை
மானியங்களுக்காகவும், இலவசங்களுக்காகவும் ரூ.60,000 கோடியை ஒதுக்கீடு செய்யும் மாநில அரசு, தடுப்பணைகள் கட்டுவதற்காகவும், ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்காகவும் போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை.

மது விலக்கு தேவை
தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது என்பது இயலாத காரியம். எனவே 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, தினமும் 5 மணி நேரம் மட்டுமே மதுக்கடை திறந்திருக்க வேண்டும். குடியிருப்பு, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும். மாதந்தோறும் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதன் மூலம் படிப்படியாக மதுவிலக்கை மாநிலத்தில் அமல்படுத்தலாம். மதுவற்ற மாநிலமும், ஊழலற்ற ஆட்சியும் அமைப்பதுதான் காந்திய மக்கள் இயக்கத்தின் கொள்கை.

25 தொகுதிகளில் போட்டி
காந்திய மக்கள் இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை தெரிந்து கொள்ளவே வரும் சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். மற்ற 209 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டியகத்துக்கு ஆதரவு அளிக்கப்படும்'' என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications