ராஜீவ் கொலை: ஜெயின் கமிஷன் விசாரிக்க உத்தரவிட்டும்.. கடைசி வரை விசாரிக்கப்படாத சந்திராசாமி!
ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் சந்திராசாமி மீது குற்றஞ்சாட்டி அவரை விசாரிக்க வேண்டும் என்று அறிக்கை அளித்திருந்தது.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட மறைந்த சந்திராசாமி கடைசி வரை சிபிஐயால் விசாரிக்கப்படவேயில்லை.
ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்திராசாமிக்கும் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வந்தது. சந்திராசாமிக்கு சர்வதேச அளவிலான தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதால் படுகொலையின் பின்புலமாக அவர் இருக்கக் கூடும் என்றும் இதற்கு பல்வேறு சான்றுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் அமைப்புடன் சந்திராசாமிக்கு இருந்த இணக்கம் குறித்த ஆதாரங்களை நரசிம்மராவ் அரசு ஜெயின் கமிஷனிடம் அளிக்கவேயில்லை என்றும் ஒவ்வொரு முறையும் அவர் ஜெயின் கமிஷன் முன்பு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுக் கொண்டே இருந்ததாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

தொலைந்த ஆவணங்கள்
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட நாளில் சாமியார் சந்திராசாமி எங்கே இருந்தார், அவர் யார் யாரைத் தொடர்பு கொண்டு பேசினார் என்ற தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தொலைந்து போயுள்ளன. அதே போன்று வயர்லெஸ் போனில் அவர் அன்றைய தினம் யார் யாரிடம் தொடர்பு கொண்டு தகவல் பரிமாற்றம் செய்தார் என்ற விவரங்களும் இல்லை என்று ஜெயின் கமிஷன் குற்றஞ்சாட்டியது.

ஜெயின் கமிஷன் சொல்வது என்ன?
சந்திராசாமி லண்டனில் வைத்து காலிஸ்தான் விடுதலைப் படையைச் சார்ந்த ஜெக்ஜித்சிங் சவுகான் என்பவர் - அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவா தாஸ் என்பவரிடம் ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டம் தீட்டியுள்ளார். இதை சேவா தாஸ் ஜெயின் கமிஷன் முன் தெரிவித்தார். லண்டனில் உள்ள சவுகான் வீட்டில் - "தீவிரவாதிகள்" பங்கு கொண்ட ஒரு கூட்டம் நடந்தது என்றும், அதில் இந்தக் கொலைத் திட்டம் பற்றி கூறப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.

தீராத சந்தேகங்கள்
இந்த நிலையில் சவுகானை அப்ரூவராக மாறும்படி வலியுறுத்தவே சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் லண்டன் சென்றார்களா என்று, கமிஷனில் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயின் தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு சுப்ரமணியசாமிக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். இதன் அடிப்படையில் சந்திராசாமியையும், சுப்ரமணிய சாமியையும் விசாரிக்க வேண்டும் என்று ஜெயின் கமிஷன் பரிந்துரைத்தது.

கடைசி வரை விசாரணை இல்லை
ராஜீவ் காந்தி கொலையை அரங்கேற்றியவர்களுக்கு நிதியுதவி செய்ததே சந்திராசாமி தான் என்ற ஒரு சாட்சியமும் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஜெயின் கமிஷன் அறிக்கை சொன்னபடி சந்திராசாமியிடம் சிபிஐ கடைசி வரை விசாரிக்காத நிலையில் இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications