மயிலாடுதுறையே அசந்து போச்சு.. ஒரே பெண்ணை 3 முறை கல்யாணம் செய்து.. அசரடித்த மாப்பிள்ளை
ஒரே பெண்ணை 3 முறை திருமணம் செய்துள்ளார் இளைஞர் ஒருவர்
மயிலாடுதுறை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர். மும்மத முறைப்படி திருமணம் செய்துள்ள சம்பவம் மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மாயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகர் ரஸ்தா எரகலித்தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்.. வயது 30 ஆகிறது.. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி வந்தனர்.. இறுதியில், திருவையாறு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவரை பேசி முடித்தனர்.. இவருக்கு 26 வயதாகிறது.

3 முறை திருமணம்
புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூக மக்களுடன் இணைந்து பழகி வந்துள்ளார்.. எல்லா மதமும் சம்மதம் என்ற ரீதியிலேயே இவருடைய கொள்கையும், வாழ்க்கையும் இருந்துள்ளது.. அனைத்து தரப்பு சமுதாயத்திடமும் இவருக்கு நண்பர்களும் உண்டு.. அவர்களின் மதங்கள் புருஷோத்தமனை பெரிதளவு ஈர்த்தும் வந்துள்ளது..

சம்மதம்
எனவே, தன்னுடையதிருமணத்தை 3 மத முறைப்படி நடத்த வேண்டும்என்று ஆசைப்பட்டார்.. இந்த விருப்பத்தை தன்னுடைய பெற்றோரிடம் சொன்னார்.. அவர்களும் புருஷோத்தமனின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டனர்.. இதை பெண் வீட்டு தரப்பிலும் தெரிவிக்கவும், அவர்களும் ஓகே சொன்னார்கள்.. இருவீட்டின் சம்மதப்படி, முதல் நாள் கிறிஸ்துவ முறைப்படி மற்றும் இஸ்லாமிய முறைப்படி, 2-ம்நாள் இந்து முறைப்படியும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அழைப்பிதழ்கள்
இந்த 3 திருமணத்திற்காகவே 3 விதமான திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டன.. உறவினர்கள், நண்பர்களுக்கும் 3 பத்திரிகைகளையுமே தந்தார் புருஷோத்தமன்.. குறித்த தேதியில், அதாவது மார்ச் 26-ம் தேதி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படியும், நேற்றைய தினம் 27-ம் தேதி இந்து முறைப்படி திருமணம் வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. ஒரே பெண்ணுக்கு மும்மதமுறைப்படி திருமணம் செய்தார் புருஷோத்தமன்..

மணமேடை
இஸ்லாமிய முறைப்படியான ஆடை, அலங்காரத்துடன் மணமேடையில் புருஷோத்தமனுக்கும் புவனேஸ்வரிக்கும் மயிலாடுதுறை பள்ளிவாசல் மவுலானா திருமணத்தை நடத்தி வைத்து ஆசீர்வதித்தார்.. பிறகு, கிறிஸ்தவ முறைப்படி ஆடை, அலங்காரங்கள் மாற்றப்பட்டு கிறிஸ்தவ போதகர் தலைமையில் மோதிரம் மாற்றி, திருமணம் நடந்தது... நேற்று காலை அதே மண்டபத்தில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது..

திருமணம்
உறவினர்கள், நண்பர்கள், சுற்றுவட்டார பகுதியினர் இந்த திருமணத்தில் பங்கேற்று மணமக்களை ஆசீர்வதித்தனர். இந்த திருமணம் குறித்து மாப்பிள்ளை புருஷோத்தமன் சொல்லும்போது, " எனக்கு முஸ்லிம், கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம்... மதநல்லிணக்கம் ஏற்படுத்தவும், தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் இருப்பதை வெளிப்படுத்தவே இப்படி ஒரு திருமணத்தை நடத்தினேன்" என்று பூரித்து சொல்கிறார்..!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications