மாப்பிள்ளையை அடக்கி வைக்காவிட்டால்.... 'வாரிசை' மிரட்டும் வம்பானந்தா!
டெல்லி வாழ் வம்பானந்தாவிடம் வாரிசுவின் மாப்பிள்ளை கோஷ்டி வம்பிழுத்ததால் கடும் ஆத்திரத்தில் இருக்கிறாராம்.
சென்னை: சமூக வலைதளங்களில் தம்மை சீண்டும் மாப்பிள்ளையை அடக்கிவைக்காவிட்டால் உங்களுக்கு எதிரான ஆவணங்களும் வெளியாகும்..பரவாயில்லையா? என தமிழகத்தின் 'வாரிசு' ஒருவருக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்திருக்கிறாராம் டெல்லி வாழ் வம்பானந்தா எம்.பி.
குடும்ப அரசியல் என்பது எப்போதுமே பேராபத்தாகவே முடிந்திருக்கிறது. இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான முன் உதாரணங்கள் இருக்கின்றன.
தமிழக அரசியல் கட்சிகளிலும் குடும்ப அரசியல், கிச்சன் கேபினெட் என அனைத்தும் கொடிகட்டிப் பறக்கிறது. பல நேரங்களில் கூட்டணிகள் தொடர்பான முடிவுகளை கிச்சன் கேபினட்டுகள்தான் தீர்மானிக்கவும் செய்கின்றன.

வம்பானந்தாவிடம் சரண்
கடந்த சட்டசபை தேர்தலின் போது 'வாரிசு' மாமாவுக்கு எதிராக டெல்லிவாழ் வம்பானந்தா எதுவும் பேசக் கூடாது என்பதற்காக மாப்பிள்ளை ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வம்பானந்தாவை நேரில் சந்தித்து அவரு மாதிரி கொள்கையெல்லாம் எங்களுக்கு எதுவும் இல்லைதானே.. எங்களுக்கு எதிராக எதுவும் செய்யாதீங்க என சரணடைந்திருக்கிறார்.

வாரிசு தலைக்கு பாராட்டு
இந்த சந்திப்பைத் தொடர்ந்துதான் 'வாரிசு' தலைவருக்கு அவ்வப்போது பாராட்டுகளை வம்பானந்தா தெரிவித்து வந்தாராம். அண்மையில் ட்விட்டரில் வம்பானந்தாவிடமே மாப்பிள்ளை கோஷ்டிகளில் ஒருவர் வம்பிழுத்திருக்கிறார்.

வம்பானந்தாவிடம் வம்பு
இதனால் கடுப்பாகிப் போன வம்பானந்தா, திரைப்படம் ஒன்றை சுட்டிக்காட்டி மாமாக்களுக்கு எப்பவுமே மாப்பிள்ளைகளால்தான் பஞ்சாயத்து என எகிறியிருக்கிறார். இதனால் அவரை சமாதானப்படுத்தும் வகையில் 'வாரிசு'வின் லாபிகளில் ஒருவர் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.

மறைமுக மிரட்டல்
அப்போதுதான் மாப்பிள்ளையை அடக்கி வைக்க சொல்லுங்க.. இல்லை எனில் இருக்கிற ஆவணங்களை ரிலீஸ் செய்துவிடுவேன்... என்னை எதுவும் கேட்க கூடாது என எச்சரிக்கை விடுத்தாராம் அந்த வம்பானாந்தா. மாப்பிள்ளையை பற்றி மாமாவிடம் எப்படி சொல்வது என கையை பிசைந்து நிற்கிறார் அந்த லாபியிஸ்ட்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications