இ-பைலிங் மூலம் வருமான வரி தாக்கல்... வரும் 7-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
சென்னை : ஆன்-லைன் மூலம் இ-பைலிங் முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2014-15-ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாகும். எனினும், வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் நலன் கருதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 5 நாட்களுக்கு சிறப்புக் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. இதில், மாத சம்பளக்காரர்கள், மூத்தக் குடிமக்கள், ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் நேரடியாக வந்து தங்களது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தனர்.
ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், ரீஃபண்ட் பெறுபவர்கள் ‛ஆன்-லைன்' மூலம் ‛இ-பைலிங்'முறையில் மட்டுமே வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ‛இ-பைலிங்'முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரித்தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியான கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி ‛ஆன்-லைன் மூலம் வரித் தாக்கல் செய்தவர்கள் கணினி சர்வர் பிரச்சினையால் மிகவும் சிரமப்பட்டதாகவும், இதனால் பலர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாமல் போனதால் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று ‛இ-பைலிங் முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications