தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் - பள்ளிக்கல்வித்துறை
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த போராட்டத்துக்கு தனியார் பள்ளி உரிமையாளர் சங்கமும் ஆதரவளிப்பதாக அதன் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும் ரயில்வே நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. இடையூறு ஏற்படுத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications