தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை பயணம் திடீர் ரத்து
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் மும்பை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையிலேயே தங்கி உள்ளார்.
சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால் இதை சபாநாயகர் தனபால் ஏற்கவில்லை. இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டு குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர். அப்போது ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இது தொடர்பாக கிழிந்த சட்டையுடனேயே ஆளுநர் வித்யாசகர் ராவை ஸ்டாலின் நேரில் சந்தித்து முறையிட்டார்.
இதன் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருடன் துரைமுருகன், திண்டுக்கல் ஐ.பெரியசாமி, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டவர்களை கைது செய்யப்பட்டு சிறிது நேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர். ஸ்டாலின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
சென்னை, திருச்சி, கரூர், வேலூர் உள்ளிட்ட இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை செல்ல திட்டமிட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications