அது மட்டும் நடக்கட்டும்.. ஆளுநருக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது.. அவரே ஓடிருவார் : ஆ.ராசா பேச்சு!
பெரம்பலூர்: தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே ஆளுநர் ஓடக்கூடிய சூழல் வரும் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.விக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சரின் அதிகாரத்தில் தலையிடும் வகையில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கம் செய்யக் கோரி, மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது.

மதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், அரியலூர் மாவட்ட செயலாளரும், அரியலூர் எம்.எல்.ஏவுமான சின்னப்பா ஆகியோர் தலைமையில் கையெழுத்து இயக்கம் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ. இராசா கலந்து கொண்டு, முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, "தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் சுமுகமான நடைமுறையில் நல்லாட்சி நடைபெற்றால், முதல்வர் ஸ்டாலினுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் அதனை தடுக்கும் விதமாக ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெற்றால் திராவிட சித்தாந்தம் வளர்ந்து விடும், திராவிட சித்தாந்தத்தை வளரவிட்டால் தமிழ்நாட்டிற்குள் காவியை கொண்டு வர முடியாது என்ற காரணத்தினால் ஆளுநர் தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் எதிராகச் செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஆகியோரோடு கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டு வரும் ஆளுநரை தூக்கி எறிய கூடிய நாள் வெகு விரைவில் இல்லை.
தமிழரை பிரதமர் ஆக்கப்போகிறோம் என்கிறார் அமித் ஷா. எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமர் என்பதை தமிழ்நாடு தான் தீர்மானிக்கும். அதனை முதல்வர் ஸ்டாலின் தான் முடிவு செய்வார். அப்படி ஒரு ஆட்சி அமைந்த இரண்டாவது நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட நடைபெறாது, தானாகவே அவர் தமிழ்நாட்டையும்ஆளுநர் மாளிகையையும் விட்டு ஓடி விடுவார். அந்த சூழலை உருவாக்குவோம்.
யார் அமைச்சராக இருக்கலாம், யார் அமைச்சராக இருக்கக்கூடாது, என முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர் முதலமைச்சர். அப்படித்தான் சட்டம் சொல்கிறது. அதிலேயும் ஆளுநர் குறுக்கே வந்து கருத்து சொல்கிறார். முதலமைச்சருக்கு நல்ல பெயர் கிடைக்கக்கூடாது என ஆளுநர் செயல்படுகிறார்." என ஆவேசமாகப் பேசினார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications