பாதியிலேயே கிளம்பிச் சென்ற ஆளுநர் ரவி.. கண்டதேவி கிராம மக்கள் எதிர்ப்பால் நூலை வெளியிடாமல் சென்றார்!
சிவகங்கை: கிராம மக்கள் எதிர்ப்பை அடுத்து கண்டதேவி கோயில், தேர் குறித்த நூலை வெளியிடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறப்பட்டுச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை வெளியிடுவதாக இருந்தது. இந்நிலையில், கிராம மக்கள் எதிர்ப்பால் அந்த புத்தகத்தை வெளியிடாமல் சென்றார் ஆளுநர்.

ஆளுநர் வெளியிட இருந்த நூலுக்கு எதிராக சார் ஆட்சியர், காவல் துறையினரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். வரலாற்றை தவறாகப் புனைந்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தை வெளியிடக்கூடாது என மனு அளித்தனர். ஆளுநர் ரவிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த நூலை வெளியிடாமலேயே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும்.
கடந்த 1998-ம் ஆண்டு தேர் வடம் பிடிப்பதில் இரு சமூகத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் 2022 முதல் 2006 வரை மாவட்ட நிர்வாகமே முன்னின்று தேரோட்டம் நடத்தியது. அதைத்தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளால் பல ஆண்டுகளாக கண்டதேவி கோவில் தேரோட்டம் நடைபெறவில்லை. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தான் கண்டதேவி தேரோட்டம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கண்டதேவியில், பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருத்தேரை நான்கு நாட்டார் சமூகத்தினர் இணைந்து இழுத்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், "இந்த பூமி புண்ணிய பூமி. சீதை தேவியை ராவணன் கடத்திச் சென்றதை ராமர் அறிந்த பூமி இது. விபீஷணர் ராமரை வணங்கிய புனித இடம் இது.
இந்த விழா சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளம். நான்கு சமூகத்தினர் இணைந்து, 400 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள். இது ஆச்சரியமளிக்கும் நிகழ்வு.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த பிரித்தாளும் சூழ்ச்சியால் ஏற்பட்ட பிரிவுகள், சுதந்திரத்திற்கு பின்னரும் ஆட்சியாளர்களிடம் அதே கொள்கை நீடித்திருப்பது வருத்தம் தருவதாகவும், ஒற்றுமை ஏற்படுவதில் அரசின் பங்கு முக்கியமானது.
தமிழ்நாட்டில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஜாதி மற்றும் உப ஜாதிகள் உள்ளன. எனவே இந்த விழா 'திருத்தேர் ஓட்டமும், சமூக நல்லிணக்கமும்' என்ற பெயருடன் நடைபெறுவது மிகவும் பொருத்தமானது இந்த விழாவை நடத்தும் இரு சமூக மக்களை காண ஆவலோடு வந்தேன்.
ந்த நாட்டில் இந்து தருமத்தை கொரோனா கிருமி, டெங்கு, மலேரியாவோடு ஒப்பிட்டு பேசும் போக்கு உள்ளது, பக்தி அறிவியலுக்கு எதிரானது என கூறி, ஆலயங்களை ஒதுக்கி வைக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்த புனித மண்ணில் பக்தியின் வழி பரவியதே நம் அடையாளம். பக்தர்களை அறிவியலுக்கு எதிரானவர்கள் என சித்தரிப்பது தவறு. கோயில்கள் மறக்கப்பட வேண்டிய இடமல்ல, மக்கள் நினைவில் வைக்க வேண்டிய இடம்.
இத்தகைய சூழ்நிலையையும் தாண்டி, கள்ளர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் இடையிலான பல ஆண்டுகளாக இருந்த வேறுபாடுகளை மறந்து, திருத்தேர் விழாவை ஒற்றுமையோடு நடத்தியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக அமையட்டும். நல்லோர் இணைந்தால் சாத்தியமில்லாததும் சாத்தியமாகும் என்பதை இம்மண் நிரூபித்துள்ளது" என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications