ஜல்லிக்கட்டு அவசர சட்டம்.. பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகை
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவது தொடர்பாக ஆலோசனை செய்ய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர உள்ளார். ஞாயிறு அன்று வருவதாக திட்டமிட்டிருந்த நிலையில் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த தடையை எதிர்த்து மிக தீவிரமான போராட்டங்கள் வெடித்தன. தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஆலோசனை நடத்தி அவசர சட்டம் பிறப்பிப்பதாக முடிவு செய்துள்ளது. அவசர சட்டவரைவு உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் வருவதால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக இன்று சென்னை வருகிறார்.
இதன் பின்னர் அவசர சட்டம் பிறப்பிப்பது தொடர்பாக அதிகாரிகள், முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications