"ராத்திரி ஆயிடுச்சுன்னா.. அந்த பங்களாவுக்குள்.. வெள்ளை டிரஸ்ஸில்".. பீதியை கிளப்பும் தஞ்சை!

பூட்டிய பங்களாவுக்குள் பேய் நடமாட்டம் என்ற வதந்தி கிளம்பி உள்ளது

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: "ராத்திரி நேரம் ஆயிடுச்சுன்னா, அந்த பங்களாவுக்குள் ஒரு வெள்ளை உருவம் உள்ளே போய் வரும்".. அதை பார்க்கவே எங்களுக்கு பயமா இருக்கும் என்று அதிர்ச்சியுடன் தஞ்சை பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

சந்திரமுகி படத்தில் ஒரு பேய் பங்களா வருமே.. அதே மாதிரி ஒரு பங்களா தஞ்சாவூரில் இருக்கிறதாம்.. இந்த பங்களா பற்றின செய்திகள்தான் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாக வெளியாகி வருகின்றன.

தஞ்சையிலுள்ள தெற்கு எப்பவுமே பரபரப்பாக காணப்படும்.. ஜனநடமாட்டம் அதிகமாக இருக்கும்.. இதற்கு காரணம், முக்கியமான பேங்குகள், பிரபல தனியார் கடைகள் என நிறைய இங்குதான் உள்ளது.

 துணை ஆணையர்

துணை ஆணையர்

இந்த ரோட்டில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 2 பங்களாக்கள் இருக்கின்றன.. இந்த பங்களாக்களை அறநிலையத்துறையில் இணை மற்றும் துணை ஆணையராக பணியாற்றும் அதிகாரிகளுக்கான குடியிருப்புகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

 விபத்து

விபத்து

அந்த வகையில், 2002-ல் ஒரு இணை ஆணையர் குடியிருந்துள்ளார்... அவர் பெயர் ராஜமாணிக்கம்.. ஒருநாள் தன் மனைவியுடன் கோயம்புத்தூருக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கி விட்டார்.. அவரது மனைவியும் உயிரிழந்துவிட்டார். அதனால் அந்த பங்களாவை ராசியில்லாத பங்களா என்று சொன்னார்கள்.. அதற்கு பிறகு வந்த அதிகாரிகளும் அங்கு தங்குவதை நிறுத்திவிட்டனர். இதனால் அந்த பங்களாக்கள் பூட்டப்பட்டுவிட்டது.. இப்படியே 18 வருஷமாக பூட்டி இருக்கிறார்களாம்.

மரங்கள்

மரங்கள்

அது பயன்பாட்டிலேயே இல்லை.. நாளடைவில் பேய் பங்களா என்று அந்த பகுதி மக்கள், சொல்லவும் ஆரம்பித்துவிட்டனர்.. அதற்கேற்றபடி, அந்த பங்களாக்களை சுற்றி நிறைய மரங்கள் வளர்ந்துவிட்டன.. புதர்கள் மண்டி கிடக்கின்றன.. சுவர்கள், பெயர்ந்து விழுந்துள்ளன.. எங்கு பார்த்தாலும் ஒட்டடைகள்.. உடைந்த கண்ணாடிகள்.. இருக்கின்றன.

மாடுகள்

மாடுகள்

இதைவிட பயங்கரம், அந்த பங்களாவுக்குள் பாம்பு போன்று ஒரு ஆலமரத்தின் வேர்கள் காட்சியளிக்கிறதாம்.. வீட்டை சுற்றியும் மாடுகளை மட்டும் கட்டுகிறார்களாம்.. அந்த வீட்டிற்கு உள்ளேயும் மாடு அடைக்கப்பட்டு வைக்கோல்களும் வைக்கப்பட்டுள்ளன.

 தற்கொலை

தற்கொலை

இதில் ஹைலைட் என்னவென்றால், அந்த பங்களாவில் ஒரு பேய் இருக்கிறதாம்.. நைட் நேரத்தில் அந்த வெள்ளை உருவம் பங்களாவுக்குள் வந்து வந்து போகிறதாம்.. 15 வருஷமாகவே ஒரு பாம்பும் அந்த பங்களாவில் இருக்கிறதாம்.. அந்த பாம்பு எப்போதாவது வெளியே வந்து, திரும்பவும் பங்களாவுக்குள்ளேயே போய்விடுமாம். 2 வருஷத்துக்கு முன்பு ஒருத்தர் தூக்கு போட்டு அந்த பங்களாவில் தொங்ங்கிவிட்டாராம். அவர் எப்படி அதற்குள் போனார் என்று தெரியவில்லை.. அதனால் யாருமே அங்கு செல்வதை என்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.

நடவடிக்கை

நடவடிக்கை

ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் அந்த இடத்தை பராமரிக்காததால் தனி நபர் ஒருவர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பேய் இருப்பதாக ஏமாற்றி வருவதாக இன்னொரு காரணம் சொல்கிறார்கள்.. எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பாழடைந்த பங்களாவை இடித்து அகற்றி அவ்விடத்தை மீண்டும் அறநிலையத்துறை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+