சென்னை பட்ஜெட்: அம்மா குடிநீருக்கு ரூ.21 கோடி... கல்விக்கு ரூ.3.93 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை: சென்னை மாநகராட்சியில் ரூ.104.21 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு வெறும் ரூ.3.93 கோடி நிதியும், அம்மா குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.21 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் 2016-17ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட்டை வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சே.சந்தானம் தாக்கல் செய்தார்.

அதில் மொத்த வருவாய் ரூ.5019.30 கோடி, மொத்த செலவு ரூ.5123.51 கோடியாகவும் இருக்கும். எனவே, 104.21 கோடி பற்றாக்குறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பட்ஜெட்டில் சாலைகளுக்கு ரூ.2,170.25 கோடி, மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.415 கோடி, பாலங்கள் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- மின்சாரம் ரூ.151 கோடி, திடக்கழிவு மேலாண்மை ரூ.19 கோடி,
- இயந்திர பொறியியல் ரூ.13.76 கோடி, கட்டிடம் ரூ.50 கோடி,
- கல்வி ரூ.3.93 கோடி (கடந்த பட்ஜெட்டில் ரூ.6.55 கோடி ஒதுக்கப்பட்டது),
- சுகாதாரம் ரூ.4.31 கோடி, குடும்ப நலம் ரூ.2.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மெரினா கடற்கரை ஒட்டிய பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், உலக தரம் வாய்ந்த சாலைகள் அமைத்தல், நடை தொடர் மேம்பாலம், நவீன முறையில் நடைபாதைகள் அமைத்தல் போன்ற சிறப்பு திட்டங்களுக்காக ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அம்மா குடிநீர் திட்டம் இவ்வாண்டு செயல்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயர் சைதை துரைசாமி வெளியிட்ட அறிவிப்புகள் :
- 10ம் வகுப்பு பொது தேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் சென்னை மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 10 ஆயிரம் ஊக்கத்தொகையும்,
- பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு தலா ₹5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் புதிதாக துணை செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும்.
- சென்னை மாநகராட்சியின் இடமான அண்ணாசாலை, ரிச்சர்ட் பார்க்கில் ரூ.95 கோடி மதிப்பில் 16 மாடி கொண்ட ‘அம்மா' அலுவலக வளாகம் கட்டப்படும். • இதேபோல் ஷெனாய் நகரில் மாநகராட்சி இடத்தில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அம்மா அலுவலக வளாகம் கட்டப்படும்.
- அனைத்து மண்டலங்களிலும் வாகன நெரிசல் மிகுந்த பகுதிகளில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் • ரூ. 125 கோடி மதிப்பில் கட்டப்படும்.மண்டலம் 5ல் உள்ள கண்ணப்பர் திடல் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்திவிட்டு, ரூ. 825 கோடி மதிப்பீட்டில் 10 மாடி கொண்ட வணிக வளாகம் மற்றும் பயணியர் விடுதிகள் கட்டப்படும்.
- தியாகராயநகரில் தணிகாசலம் தெரு மற்றும் தியாகராயர் சாலை சந்திப்பில் அடுக்குமாடி கார் மற்றும் பைக் நிறுத்தும் பார்க்கிங் வளாகம் கட்டப்படும்.
இவ்வாறு பல முக்கிய அறிவிப்புகளை சைதை துரைசாமி அறிவித்தார்.
More From
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications