பொன்.மாணிக்கவேல் மகள் திருமண நிகழ்ச்சியில் எச்.ராஜா பங்கேற்பு.. என்னே பவ்யம், என்னே சிரிப்பு
Recommended Video

சென்னை: சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மகள் திருமணம், சென்னையில், இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு பொன்.மாணிக்கவேலிடம் அளவளாவினார்.
சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு, பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் திருட்டுப்போன சிலைகளையும் மீட்டு வந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மக்களின் ஏகோபித்த பாராட்டுகளை பொன்.மாணிக்கவேல் டீம் பெற்று வருகிறது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
இருப்பினும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பொன்.மாணிக்கவேல் குழு விசாரணை நடத்துவதாக கூறி, சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெரிய புள்ளிகளை காப்பாற்றுவதற்காக சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே, தமிழக அரசு பரிந்துரையை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
எச்.ராஜா பங்கேற்பு
இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் மகள் டாக்டர். பாக்கியலட்சுமி திருமணம் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்சன் சென்டரில் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண விழாவில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். அவர் பொன்.மாணிக்கவேலிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
|
தில்ல பார்த்தீங்கல்ல
எச்.ராஜா, இந்த திருமண விழாவில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களை தூண்டிவிட்டுள்ளது. சிலர் ஆதரவாகவும், சிலர் கேலி செய்தும் ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளனர். எங்க தலைக்கு தில்ல பார்த்திங்களா என கேட்கிறார், இந்த நெட்டிசன். ஏன் இப்படி கேட்கிறார், இதன் அர்த்தம் என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.
|
விரைவில் கைது
என்னதான் நாடகம் போட்டாலும் ஐயா பொன்.மாணிக்கவேல் அவர்கள் சரியான முறையில் விசாரணை செய்து சிலை திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்ற நம்பிக்கை தமிழக மக்களுக்கு உள்ளது. தமிழக மக்களுக்கு திருடன் யார் என்று முக்கால்வாசி தெரியும். விரைவில் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும். இப்படி கூறுகிறார் இந்த நெட்டிசன். ஆமா, யார் நாடகம் போடுகிறார்? சிலை திருடன் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்கிறாரே யாராக இருக்கும்? சரி விடுங்க, போலீசார் அதை கண்டுபிடிக்கட்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications