நக்கலா.. நக்கலான்னு கேட்டேன்.. செய்தியாளரிடம் எகிறிய எச் ராஜா!
தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சியை பிடிக்கும் என கேட்ட செய்தியாளரிடம் எச் ராஜா என கேட்டு எகிறினார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சியை பிடிக்கும் என கேட்ட செய்தியாளரிடம் எச் ராஜா என
நக்கலா கேட்டு எகிறினார்.
குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் தொடர்ந்து 6வது முறையாகவும் ஹிமாச்சலில் பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைக்கிறது.
இதனால் பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி தலைவர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் பாஜகவின் வெற்றி குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார்.

மக்களிடம் தெளிவு
அப்போது குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பாஜகவுக்குக் கிடைத்த வெற்றியால் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பதில் மக்களிடம் தெளிவு பிறந்துள்ளது என்று அவர் கூறினார்.

எப்போது ஆட்சியை பிடிக்கும்?
இந்த தேர்தலின் வெற்றி ஜாதி மற்றும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உள்ளது என்றும் எச் ராஜா கூறினார். அப்போது செய்தியாளர் ஒருவர் தமிழகத்தில் பாஜக எப்போது ஆட்சியை பிடிக்கும் என கேள்வி எழுப்பினார்.

நக்கலா? நக்கலான்னு கேட்டேன்..
இதுஏதோ கேட்கக்கூடாத கேள்வி என்பதை போல எகிறினார் எச் ராஜா. மேலும் செய்தியாளரிடம் கோபமாக நக்கலா? நக்கலான்னு கேட்டேன் என்று கூறிவிட்டு வேகவேகமாக இடத்தை காலி செய்து புறப்பட்டார்.

எச் ராஜாவுக்கே வெளிச்சம்
தமிழகத்தில் பாஜக எப்பேது ஆட்சியை பிடிக்கும் என்று கேட்ட செய்தியளாரிடம் எச் ராஜா ஏன் இவ்வளவு ஆவேசமாக பேசினார் என தெரியவில்லை. நடக்காத ஒன்றை பற்றி ஏன் கேட்கிறீர்கள் என ஆவேசப்பட்டாரோ என்னவோ... அவருக்கே வெளிச்சம்..
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications