லிங்கா வரிச்சலுகை வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
லிங்கா படத்துக்கு வரி விலக்கு அளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
மேட்டூரைச் சேர்ந்த ஒரு நபர் லிங்கா படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா என்ற படம் அண்மையில் வெளியானது. இந்த படத்துக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளித்துள்ளது.
பொதுவாக தமிழில் தலைப்பு கொண்ட, தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கின்ற திரைப்படங்களுக்குத்தான் தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும். ஆனால், ‘லிங்கா' என்பது தமிழ் வார்த்தை அல்ல. அது சமஸ்கிருத வார்த்தை. எனவே, இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்ததை ரத்து செய்யவேண்டும்,' என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பொதுநல வழக்கு தொடர்வதற்கு என்று சில வரையறை உள்ளது. வரி விலக்கு அளிப்பதை எல்லாம் எதிர்த்து பொதுநல வழக்கு தொடர முடியாது. வழக்கை வாபஸ் பெறுகிறீர்களா? இல்லை தள்ளுபடி செய்யட்டுமா?' என்று கேட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் வக்கீல் கூறியதை தொடர்ந்து, மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications