குடியிருப்பு பகுதிகளில் ஒரு மதுக் கடையும் இருக்கக் கூடாது.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
குடியிருப்பு பகுதிகளில் இருந்து எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: குடியிருப்பு பகுதிகளில் ஒரு மதுக் கடையும் இருக்கக் கூடாது. அங்கிருந்து மாற்றி அமைக்கப்பட்ட மதுக்கடைகள் எத்தனை என்று 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பிரசன்னா உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பிரசன்னாவுக்கு பரோல் கேட்டு விண்ணப்பித்தும் சிறைத்துறை வழங்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான பெஞ்ச் இன்று அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தது.
21 பேர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், அனைவரையும் இன்று மாலைக்குள் விடுவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.
அத்தோடு குடியிருப்புப் பகுதிகளில் மதுக் கடைகள் இருக்கக் கூடாது என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். மேலும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து மாற்றி அமைக்கப்பட்ட மதுக்கடைகள் எத்தனை என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications