Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமா வரிச் சலுகை யாருக்கு? விசாரணையை ஒத்தி வைத்தது நீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா துறைக்கு அரசு வழங்கும் கேளிக்கை வரிச்சலுகையான 30 சதவீத பணம், யாருக்குப் போய் சேர வேண்டும்? என்பது தொடர்பான விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கே.ஜே.சரவணன் உயர்நீதி741மன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 30 சதவீதம் வரி விலக்குப் பெற்ற படத்துக்கு தன்னிடம் முழுக் கட்டணம் வசூலித்துவிட்டதாகவும், அப்படிக் கூடுதலாக வசூலித்த தொகையை 9 சதவீத வட்டியுடன் தியேட்டர்காரர்கள் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

HC postponed hearing on cinema entertainment tax case

இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், "தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தமிழ் படங்களில் வன்முறை காட்சிகள், ஆபாசக்காட்சிகள், பிறமொழி வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனம் குறைவாக இருக்கும் தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்திற்காக கேளிக்கை வரி சலுகை வழங்கப்படுகிறது. திரைப்படங்களை பொதுமக்களுக்கு காட்டும் கடமை தியேட்டர் உரிமையாளர்களுக்கு உண்டு. அரசு வழங்கும் கேளிக்கை வரிச்சலுகையையும் தியேட்டர்களில் அமல்படுத்தியாக வேண்டும். வரிச்சலுகை என்பது உரிமையாகாது.

தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் சலுகைதான் வழங்கப்படுகிறது. இந்த வரிச்சலுகை சினிமா தொழிலுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மட்டும்தான், படம் பார்க்கும் பொதுமக்களுக்கு பொருந்தாது என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க இயலாது. எனவே,மனுதாரரிடம் வரிச்சலுகை இல்லாமல் கட்டணத்தை வசூலித்தது தவறு. ஒருவரிடம் அதிக கட்டணம் வசூலித்தால், கூடுதலாக வசூலிக்கப்பட்டதை திருப்பி தந்தாகவேண்டும். எனவே, மனுதாரரிடமிருந்து வரிச்சலுகையை கணக்கில் கொள்ளாமல், மனுதாரரிடம் இருந்து கூடுதலாக வசூலித்த ரூ.107-ஐ தியேட்டர் உரிமையாளர் திருப்பி தரவேண்டும்.

அதேசமயம், படம் பார்த்த அனைவருக்கும் திருப்பி கொடுக்க தற்போது இயலாது. எனவே, கூடுதலாக மற்றவர்களிடம் வசூல் செய்த தொகையை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். வரிச்சலுகை குறித்து டிக்கெட்டில் குறிப்பிட வேண்டும். கட்டண விவரங்கள் அடங்கிய டிக்கெட்டை கேளிக்கை வரித்துறை அதிகாரியிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்று மனுதாரர் கேட்டுள்ளார். ஏற்கனவே வரிச்சலுகை தொடர்பாக வணிகவரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. எனவே, இதை ரத்து செய்ய வேண்டியது இல்லை. அதேவேளையில் இந்த வரிச்சலுகை படம் பார்க்கும் ரசிகர்களுக்குதான் சென்றடைய வேண்டும்.

ஆகவே, கேளிக்கை வரி சலுகை ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில், நீதிமன்ற தீர்ப்பு கிடைத்த 4 வாரத்திற்குள் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வரிச்சலுகை பெற்ற படங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், வணிகவரித்துறை அதிகாரிகள் ஆகியோர் உரிய நெறிமுறைகளை வகுத்து, வரிச்சலுகை பெறும் திரைப்படங்களை பார்க்கவரும் ரசிகர்கள் மீது வரி பாரம் விதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து, மும்பையை சேர்ந்த ‘ஐநாக்ஸ்' தியேட்டர் குழுமம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

முன்னர் இவ்வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிபதி, தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தல் சட்டம்-1952-ஐ மீறிய வகையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். வரிவிலக்கு தொடர்பான முழுப்பலனும் டிக்கெட் வாங்கி சினிமா பார்ப்பவர்களை மட்டுமே சென்று சேர வேண்டும் என்னும் கருத்தும் ஏற்புடையதல்ல.

இந்த வரிவிலக்கை பெறுவதற்காக தேவையான அம்சங்களை உள்ளடக்கியபடி படத்தை தயாரித்து, அரசை திருப்திப்படுத்தி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், அவற்றை வாங்கி திரையிடும் வினியோகிஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த திரைத்துறையினரை இந்த வரிவிலக்கின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதை கவனிக்கவும் நீதிபதி தவறி விட்டார். எனவே, இந்த புதிய மனுவின் மீது மீண்டும் விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இம்மனுவின் மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன் மற்றும் ஜி.சொக்கலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய சென்னை உயர்நீதிமன்ற டிவிஷனல் பெஞ்ச் முன்னர் நேற்று விசாரணைக்கு வந்தது. ஐநாக்ஸ் தியேட்டர் குழுமத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், மேற்படி தீர்ப்பு தமிழ்நாடு கேளிக்கைச் சட்டம் மற்றும் தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தல் சட்டம்-1952-ஐ மீறிய வகையில் அமைந்துள்ளதாக கூறினார்.

வரிச்சலுகையின் பலன்கள் சினிமா தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவர்கள் அதை முறையே வினியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பகிர்ந்து அளிப்பார்கள் என அவர் வாதாடினார். இந்த வாதத்துக்குப் பின்னர் இவ்வழக்கின் விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+