செல்லாது.. செல்லாது.. வழக்கும் செல்லாது.. 500 ரூபாய் நோட்டு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை: 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு ஒன்று நேற்று தொடரப்பட்டது. இந்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
நேற்றில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு திடீரென்று அறிவித்தது. இதனால் சாதாரண மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கையில் உள்ள பணத்தை செலவு செய்யவும் முடியாமல், புதிய நோட்டுகளை வங்கியில் இருந்து பெறவும் முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் சீனி அகமது ஐகோர்ட் மதுரையில் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் டிசம்பர் 30ம் தேதி வரை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லும் என்று உத்தரவிடக் கோரினார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகிய இருவர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, கறுப்புப் பணத்தை ஒழிக்கவே மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் இதனால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தற்காலிகமானதுதான் என்றும் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
மேலும், இதுபோன்ற முக்கியமான அறிவிப்புகளை முன்கூட்டியே அறிவித்தால் கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்குத்தான் சாதகமாக அமையும் என்றும் இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்று ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் இதுஒன்றும் புதிதல்ல என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு மீறிய நடவடிக்கை இல்லை என்றும் தனி மனித சுதந்திரத்தை இந்த நடவடிக்கை மீற வில்லை என்றும் நீதிபதிகள் கருத்துக்களை தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications