பன்றிக் காய்ச்சல் குறித்து கவலை வேண்டாம்- தடுப்பு நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோய் நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

2010 ஆம் ஆண்டு பன்றிகாய்ச்சல் வைரஸ் கிருமியின் வீரியம் குறைந்த காரணத்தினால் இந்தக் காய்ச்சலை கொடிய நோய் என்ற நிலையில் இருந்து மாற்றி அடுத்த கட்டத்தில் அந்தந்த பருவ காலங்களில் காணப்படும் குணப்படுத்தக்கூடிய சாதாரண ஃபுளூ காய்ச்சல் என்று உலக சுகாதார நிறுவனம் அதன் தரத்தைவகைப்படுத்தியுள்ளது.
இந்தக் காய்ச்சலின் தாக்கம் தற்போது டெல்லி, ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களிலும், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு இந்நோயை தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பன்றிக் காய்ச்சலுக்கு ஒசில்டாமிவீர் என்ற மருந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொண்டால் இந்நோயை எளிதாக குணப்படுத்தலாம்.
தமிழக அரசு மருத்துவ நிலையங்களில் தேவையான அளவு டாமி புளூ மாத்திரைகள் தயார் நிலையில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களாக, கிங் மருத்துவநிலையம் உட்பட ஆறு ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் செயல்படுகின்றன. இது தவிர 13 தனியார் ஆய்வு மையங்களுக்கும் இந்த காய்ச்சலைக் கண்டறிவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென, தனியாக சிறப்பு வார்டுகள் அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்க்கு தேவையான சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குனரகத்தில் பன்றிக் காய்ச்சல் மற்றும் அனைத்து வகையான காய்ச்சல்கள் குறித்து 24 மணி நேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற 104 சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க சில சுகாதாரமான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இருமும் பொழுதும், தும்மும் பொழுதும் கைகுட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைககளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.
குறிப்பாக வீட்டிலிருந்து பணியிடம் மற்றும் வெளியிடங்களுக்கு சென்றவுடன் ஒரு முறை கைகளை நன்றாக கழுவ வேண்டும். மீண்டும் வீடு திரும்பியவுடன் ஒரு முறை கைகளை கழுவ வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ளவேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் மருந்துக்கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் இந்தக் காய்ச்சலைத் தடுப்பதற்கு தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், அவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான சிசிக்சை அளிக்கவும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே இக்காய்ச்சல் தொடர்பாக பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் குறித்து தொடர்பு கொள்ளை தொலைபேசி எண்கள்: 044 - 24350496, 044- 24334811, 94443 40496 மற்றும் 93614 82899.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications