சுட்டெரிக்கும் வெப்பம்..கொதிக்கும் சாலைகள்..தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா?
சென்னை: கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து ஜூன் 5ஆம் தேதி திங்கள் கிழமை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள், ஆண்டு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்து ஏப்ரல் இறுதியில் விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 6 முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்று கடந்த மாத இறுதியில் அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளை கோடை வெயில் தாக்கம் காரணமாக திறக்க வேண்டுமா என்பதை அந்த நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று பல இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவானது. சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பல இடங்களில் வெப்பநிலை அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம் சமீபத்தில் வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் ஈரப்பதத்தை இழுத்துக்கொண்டாலேயே இங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வெப்ப அழுத்தம் காரணமாக பலரும் உடல் நல பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். வானிலை ஆய்வாளர்களும் மருத்துவர்களும் பகலில் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் மாநிலத்தில் மே 20 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் மே 21 முதல் ஜூன் 10 வரையும், மத்திய பிரதேசத்தில் மே 1 முதல் ஜூன் 15 வரையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஜூன் 1ஆம் தேதிக்கு பதிலாக அனைத்து வகுப்புகளுக்கும் சேர்த்து ஜூன் 5ஆம் தேதி திங்கள் கிழமை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா பார்க்கலாம்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications