தமிழகம் முழுக்க வெளுத்தெடுக்கும் மழை... வாக்குப் பதிவு மந்தம்!
சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் இன்றைய தேர்தலில் வாக்குப் பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது.
காலை 7 மணிக்கு தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு தொடங்கியது. அதே நேரம் மழையும் ஆரம்பித்துவிட்டது.
#TamilNaduElection : CM Jayalalithaa casts her vote at Chennai's Stella Maris College pic.twitter.com/CeZfGTvZdA
— ANI (@ANI_news) May 16, 2016
சென்னையில் டிசம்பர் பெரு வெள்ளத்துக்குப் பிறகு இப்போதுதான் மழை பெய்கிறது. மிரட்டலாக ஆரம்பித்த மழை சிறிது நேரத்தில் தூறலாகக் குறைந்துவிட்டது. காலை 9 மணியிலிருந்து மப்பும் மந்தாரமுமாகவே உள்ளது.
திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்று இரவு தொடங்கிய மழை, இன்று காலையும் தொடர்ந்தது. திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் கோடை மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்றுமுதல் மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று காலை தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
நெல்லை, மதுரை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. வாக்களிப்பதில் ஆர்வமுள்ள மக்கள் குடைகளோடு காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
கோவை, நீலகிரி உள்பட 15 மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவதால் வாக்களிப்பில் மந்தமான நிலை நிலவுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications