ராமநாதபுரத்தில் கனமழை தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் கன மழையால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பேரிடர் தடுப்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாயினர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்த வரையில், ராமநாதபுரத்தில் 75 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பாம்பனில் 50 மி.மீ மழையும் பதிவாகியது.
ராமேஸ்வரம் பகுதியில் பெய்த கனமழையால், ராமநாதசுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோவிலுக்குள் தேங்கிய தண்ணீரால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாயினர். இதனைத் தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications