இரண்டு நாட்களாக ஓய்ந்துள்ள மழை.. கேரளாவில் மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை..!!
கனமழை மற்றும் வெள்ளத்தால் சின்னாபின்னமான கேரளாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.
Recommended Video

சென்னை: கனமழை மற்றும் வெள்ளத்தால் சின்னாபின்னமான கேரளாவில் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது.
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் லேசாக பெய்த மழை பின்னர் விஸ்வரூபம் எடுத்தது.
இதனால் கேரளாவின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின.

மக்கள் மாயம்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 400 பேர் வரை மரணமடைந்துள்ளனர். ஏராளமான மக்களை காணவில்லை என கூறப்படுகிறது.

நிவாரண முகாம்கள்
இதுவரை ஏறக்குறைய 8 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 5645 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்படாமல், நீரில் தத்தளித்து வருகின்றனர்.

கேரளாவுக்கு உதவிக்கரம்
முகாம்களில் 5ஆவது நாளாக உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது.

ஓய்ந்துள்ள மழை
மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வந்தாலும், நிவாரணம் வழங்கும் பணிகளுடன் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களாக கேரளாவில் பல பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளது.

மக்கள் நிம்மதி
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

சுகாதாரப் பணிகள்
இதனிடையே 8 நாட்களுக்குப் பிறகு கொச்சி விமான நிலையத்துக்கு இன்று மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது.கேரள மாநிலம் கோட்டயத்தில் வெள்ளம் வடிந்த பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மெல்ல திரும்புகிறது
கேரளாவில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் வடிய துவங்கிய உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல கேரளாவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications