சென்னையில் வியாழக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும்.. சொல்கிறது நார்வே வானிலை மையம்!
சென்னையில் வியாக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வியாக்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒர மாதம் கடந்துவிட்டது. ஆனாலும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இதுவரை சொல்லும் அளவுக்கு மழை பெய்யவில்லை.
தொடக்கத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை அதிரடி காட்டியது. இதேபோல் டெல்டா மாவட்டங்களில் ஒருவாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் அதன் பிறகு பெரியளவில் மழை இல்லை.

முதல் முறையாக சந்திக்கிறது
ஆனால் இலங்கை அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் கடந்த இரண்டு நாட்களாக தென் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் முதல் முறையாக தென் தமிழகம் தற்போது நல்ல மழையை சந்தித்து வருகிறது.

சென்னையில் நாளை முதல்
இந்நிலையில் சென்னையில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதன் கிழமையான நாளை காலை முதல் சென்னையில் லேசானது முதல் மிதனமானது வரை மழை பெய்யும் என்றும் நார்வே வானிலை மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விட்டு விட்டு கனமழை
இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை முழுவதும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்யும் என்றும் அந்த வானிலை மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்கள் மேகமூட்டம்
வெள்ளிக்கிழமை சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை முதல் டிசம்பர் 4ஆம் தேதியான திங்கள் கிழமை வரை மூன்று நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்தவாரம் கனமழை..
ஆனால் டிசம்பர் 5 செவ்வாய் கிழமையும் டிசம்பர் 6ஆம் தேதியான புதன்கிழமையும் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நார்வே நாட்டு வானிலை மையம் கூறியுள்ளது. இதுவரை தமிழகத்தில் போதுமான அளவு வடகிழக்குப் பருவமழை பெய்யாத நிலையில் நார்வே நாட்டு வானிலை மைய கணிப்புகள் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications