உயிர் கொல்லி நோயுடன் போராடும் 3 வயது சாஹிமை காப்பாற்ற உதவுங்கள்
சென்னை: சென்னையை சேர்ந்த சிறுவன் முகமது ஜாஹிம்(3) ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து சிறுவனின் தந்தை கூறியதாவது,
முதலில் என் மகனின் உடம்பு நிறம் மாறியது, அவனின் வயிறு கர்ப்பிணிகளின் வயிறு போன்று பெரிதானது. பையன் சோர்வாகிவிட்டான். பயந்துபோய் அருகில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். மருத்துவர் ரத்த பரிசோதனை செய்தபோது ரத்த புற்றுநோய் இல்லை என்று வந்தது. ஆனால் மருத்துவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் என் மகனை ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

பையனை 5 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்குமாறு கூறினார்கள். பின்னர் மருத்துவர் என் குடும்பத்தாரை அழைத்து என் மகனுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
அதை கேட்டு நானும், என் மனைவியும் கதறி அழுதோம். என் மகனின் நிலையை பார்த்து இறந்துபோக நினைத்தேன். ஆனால் என் மற்ற 2 குழந்தைகளை நினைத்து மனதை மாற்றிக் கொண்டு ஜாஹிமை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்.
என் மகனுக்கு முதல் கீமோ செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கீமோ செய்ய வேண்டும். 3 ஆண்டுகள் சிகிச்சை பெற வேண்டும் என்றும், அதற்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நான் ஒரு பள்ளியில் கணக்காளராக பணியாற்றினேன். ஜாஹிமை பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதால் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. என் மகனின் உயிரை காப்பாற்ற நீங்கள் உதவி செய்தால் அதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?















Click it and Unblock the Notifications