சிறு வயதிலேயே சிறுநீரகம் செயலிழந்த சிறுவன்.. சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் பெற்றோர்.. உதவுங்கள்
சிறுநீரகம் செயலிழிந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள்.
சென்னை: சிறுநீரகம் செயலிழிந்த சிறுவனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவுங்கள்.
எங்களுக்கு ஒரு மகன் பிறந்த போது நாங்கள் பெற்ற மகிழ்ச்சி எல்லையில்லாதது. பெற்றோராகிய சந்தோஷத்தில் திளைத்திருந்தோம். ஓன்பது வருடங்களுக்கு முன்பு தான் வேதாந் எங்கள் வாழ்வில் அடியெடுத்து வைத்தான். அவன் இந்த உலகிற்கு வந்ததை நினைத்து கொண்டாடினோம். அந்த தருணம் முழுவதும் எங்கள் மனதில் சந்தோஷம் மட்டுமே நிறைந்திருந்தது.
இந்த சந்தோஷத்துடனே அவன் வளர்ந்தான். பள்ளிக்கு சென்று விளையாடும் பருவம் வரை மகிழ்ச்சியாகவே சென்றன. பள்ளி விடுமுறை நாட்களில் கூட அவன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு நேரத்தைக் கழித்து கொண்டு தான் இருந்தான். அவனுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். கார் பொம்பைகளை வைத்துக் கொண்டு வீட்டை சுத்தி சுத்தி ஓட்டுவான். அதனால் என்னவோ அவனது கனவும் ஒரு ரேஸ் கார் ஹூரோவாக ஆக வேண்டும் என்பதாகவே இருந்தது.
ஆனால் அந்த சந்தோஷம் நிலைக்கவில்லை. இப்பொழுது அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். எல்லாரும் அவனை பார்க்க வரும் போதெல்லாம் அவனுக்கு பிடிக்கும் என்று கார் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். வேதாந் சிறுநீரகம் செயலிழந்து விட்டது. அவனது இரத்தம் முழுவதும் டயாலிசிஸ் முறை மூலம் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது.
உடலில் உள்ள கழிவுகளை அதன் மூலம் மட்டுமே நீக்க முடியும் என்று சொல்லி விட்டனர் மருத்துவர்கள். ஆனால் அவன் நீண்ட காலம் உயிர் வாழ அது மட்டும் போதாது. ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் அவனுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ததாக வேண்டும். இதற்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று சொல்லியுள்ளனர்.
என்னுடைய பெயர் சாண்டிப் சேக்லே, நான் வேதாந்தின் தந்தை. நான் ஒரு பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். மாதத்திற்கு 20,000 ரூபாய் வரை சம்பாரிக்கிறேன். நாங்கள் ஒரு நாள் எங்கள் சொந்த ஊருக்கு சென்று வீடு திரும்பிய போது என் மகன் சிறுநீர் கழிக்கும் போது ஒரே வலி என்று கத்தினான். எதாவது சிறுநீரக தொற்றாக இருக்கும் என்று அருகில் இருக்கும் மருத்துவரை சந்தித்தோம். இந்த நிலை அன்றிரவே மிகவும் மோசமாகி விட்டது. திடீரென்று இரத்தத்துடன் வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டான். அவனுடைய இரத்த அழுத்தம் தாறுமாறாக உயர ஆரம்பித்து விட்டது. 190 mmHg ஆக இருந்தது. அவனுடைய ஆக்ஸிஜன் அளவும் குறையத் தொடங்கி விட்டது. உடனடியாக அவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கு சில பரிசோதனைகளை எடுத்தனர். அவனுடைய சிறுநீரகம் செயலிழந்து விட்டது. இன்னும் இப்படியே வைத்து இருந்தால் அவன் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று மருத்துவர்கள் கூறுவிட்டனர்.
அவன் ரொம்ப சுறுசுறுப்பான துடிப்பான பையன். அவனை பிடிக்க வேண்டும் என்றால் அவன் அம்மா எப்பொழுதும் அவனெல்லாம் பின்னே ஓடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். அப்படி இருந்த அவனது கையில் எழுந்திருக்க கூட முடியாத படி ஊசிகள் குத்தப்பட்டு இரத்தம் வெளியேற்றப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுவதை காணும் போது எங்களால் தாங்க முடியவில்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே பதிலாக வந்து நிற்கிறது. நாங்கள் சிரித்து வெகு நாட்கள் ஆகிறது. எங்கள் கண்முன்னே அவன் இப்படி இருப்பது மனத்தில் ரணமாக கனக்கிறது. என்னுடைய மனைவியின் சிறுநீரகத்தை எடுத்து அவனுக்கு பொருத்த முடிவு செய்துள்ளோம். நாங்கள் அவனை இழக்க தயாராகவில்லை. அவன் எப்படியும் தன் வாழ்க்கையுடன் போராடி வென்று விடுவான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அவனது மாற்று அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்ட முடியாமல் நான் கஷ்டப்பட்டு வருகிறேன். உங்களுடைய உதவி இருந்தால் அவனது உயிரை மீட்டெடுத்து விடுவேன்.
என்னுடைய கனவை காப்பாற்ற எனக்கு உதவுங்கள். மற்ற பிள்ளைகளைப் போல் அவனது கனவும் நிறைவேற வேண்டும். ஒரு தந்தையாக நான் படும் துயரை போக்க எனக்கு கை கொடுங்கள். உங்களுடைய சிறு உதவி அவனது வேதனையை போக்கி அவனது முகத்தில் புன்னகையை ததும்ப செய்யட்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி
















Click it and Unblock the Notifications