உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 3 வாரங்களுக்கு நீடிப்பு- ஹைகோர்ட் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரத்துக்கு ஒத்திவைத்தது
மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க திமுக கால அவகாசம் கேட்டது. 27 பக்க மனுவுக்கு பதில் தர திமுக கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை 3 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடை மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் பழங் குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனக்கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெறவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து கடந்த அக்டோபர் 4ம் தேதி உத்தர விட்டார். தேர்தலை டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்கவும், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடாத வண்ணம் தடை செய்யவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினார்.

High Court extends cancellation of local body elections in Tamil Nadu

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் சார்பில் அதன் செயலாளர் டி.எஸ்.ராஜசேகர், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இரண்டாவது அமர்வு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்தச் சூழலில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசும் திமுக தரப்பும் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அக்டோபர் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து அக்டோபர் 24ம் தேதிக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலர்களை நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்க திமுக கால அவகாசம் கேட்டது. 27 பக்க மனுவுக்கு பதில் தர திமுக கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை 3 வார காலத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

இதனிடையே உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. திமுக தொடர்ந்த வழக்கை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறிய பின்னரே உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+