கலெக்டர் ஆபிஸ் 3 மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்... விழுப்புரத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் சி.மையுர் காலெனியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகன் சங்கர் (37). இவருக்கு மனநிலை பாதிப்பு எனக் கூறப்படுகிறது.

High Drama As Mentally Deranged Man Tries To End Life At Collectorate

இந்நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சங்கர், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். சுமார் 70 அடி உயரத்திலிருந்து குதிக்க முற்பட்ட சங்கரை, சுமார் அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் போலீசார் காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தின் போது, தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த சங்கரை காப்பாற்ற, தனது பணிக்கு இடையிலும் சுவற்றில் உயிரைப் பணயம் வைத்து ஏறி போலீசாருக்கு உதவி செய்தார் புகைப்படக் கலைஞர் குரு என்பவர். அவருக்கு அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+