மனித சங்கிலி போன்ற அமைதி வழி போராட்டத்தை எப்படி தடுக்க முடியும்... ஹைகோர்ட் தலைமை நீதிபதி கேள்வி!
பொதுமக்கள் அமைதியான வழியில் போராடுவதை எப்படி தடுக்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : திமுக மனித சங்கிலி போராட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கருத்து கூறிய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதியான போராட்டத்தை எப்படி தடுக்க முடியும் என்று கேட்டுள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக நாளை தமிழகத்தில் திமுக சார்பில் மனிதசங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனித சங்கிலி போராட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று அறிவித்து போராட்டத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று சத்தியமூர்த்தி என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்த போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திமுகவின் மனித சங்கிலி போராட்டத்திற்கு ஜூலை 25ம் தேதியே அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மனுவை தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி முக்கியமான இரண்டு கேள்விகளை எழுப்பியுள்ளார். போராட்டத்தில் ஈடுபடுவது அனைவருக்குமான உரிமை. பொதுமக்களின் அன்றாடப் பணிகளைத் தொடர முடியாமல் இடையூறு ஏற்படுத்தினால் மட்டுமே காவல்துறை தலையிட முடியும்.
கருப்பு பட்டை அணிந்து சாலையோரத்தில் மனித சங்கிலி நடத்தும் போராட்டத்தில் எப்படி நீதிமன்றம் தலையிட்டு தடை விதிக்க முடியும் என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்தாலும், காவல்துறை அனுமதியில்லாததால் திமுகவின் மனித சங்கிலி போராட்டம் அறிவித்தபடி நாளை நடக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications