வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய யூனுஸின் பெயரை குழந்தைக்கு வைத்த சித்ரா
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்த சித்ரா என்ற கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது. அவர் தன்னை காப்பாற்றிய வாலிபர் யூனுஸின் பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை சக மக்கள் காப்பாற்றி உணவு, உடை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவரான யூனுஸ் ஊரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டுள்ளார்.

அந்த சமயத்தில் வெள்ளத்தில் தத்தளித்த மோகன் மற்றும் அவருடைய நிறைமாத கர்ப்பிணி மனைவியான சித்ராவை யூனுஸ் பார்த்து காப்பாற்றியுள்ளார். அவர்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்த்துள்ளார்.
அப்போது சித்ராவுக்கு பிரசவ வலி எடுத்து அழகிய குழந்தை பிறந்துள்ளது. நீரில் தத்தளித்த தங்களை காப்பாற்றிய யூனுஸுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மோகன்-சித்ரா தம்பதி தங்கள் குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.
இக்கட்டான நேரங்களில் யாருக்கும் மதம் தெரிவது இல்லை மனித நேயம் தான் தெரிகிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. முன்னதாக அண்மையில் மும்பையில்
நிறை மாத கர்ப்பிணி பெண்ணை டாக்சி டிரைவர் ஒருவர் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார். அந்த முஸ்லிம் பெண்ணுக்கு, விநாயகர் கோயிலுக்குள் (பொதுவாக தீட்டுபட கூடாது என்பது கோயில் ஆகம விதி) வைத்து பேறுகாலம் பார்த்தனர். தனது ஆண் குழந்தைக்கு அந்த பெண் கணேஷ் என்று பெயர் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications