ஜல்லிக்கட்டு எதிரொலி.." கோக்" நறுமண பால் விளம்பர பலகையை அகற்றியது ஓட்டல் சரவணபவன் !
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் வரலாறு காணாத போராட்டங்கள் நடைபெற்றன. மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணர்கானோர் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி அறவழியில் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாகவும், பன்னாட்டுக் கம்பெனிகள் மூலம் இந்த சதி ஜல்லிக்கட்டு மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். ஜல்லிக்கட்டு காளைகளை ஒழிப்பதன் மூலம் நாட்டு மாடுகளை முற்றிலும் இல்லாமல் செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

இந்த சதிக்கு பதிலடி கொடுக்கம் வகையில் அமெரிக்க நாட்டுத் தயாரிப்புகள் அனைத்தையும புறக்கணிப்போம். குறிப்பாக பெப்சி, கோக் பானங்களை முற்றிலும் ஒழிப்போம் என்ற குரல் ஒழிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே கோக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள Vio என்ற நறுமண பால் சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதற்கான விளம்பர பலகை சரவணபவன் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அதில், VIO பால் நாங்கள் விற்பனை செய்யவில்லை. இது கோகோலா நிறுவனத்தின் சுவையூட்டப்பட்ட பால். இந்தப் பால் காபி மற்றும் டீ எதற்கும் உபயோகப்படுத்த முடியாது. இதை நாங்கள் உபயோக்கிவில்லை. நாங்கள் மாடுகள் தனியாக வளர்க்கிறோம். அது தவிர நாட்டு மாடு பால் பல இடங்களில் கலெக்சன் சென்டர் வைத்து வாங்கி, இயற்கையாக அதை மட்டுமே உபயோகப்படுத்துகிறோம்.
பாக்கெட் பால் கூட நாங்கள் உபயோகிப்பதில்லை. விளம்பரத்திற்காக மட்டுமே அந்தப் பெயர் பலகைகள் அந்த நிறுவனத்தால் வைக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வேண்டுகோளுக்காக அந்தப் பலகை எடுக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications