அம்மாகிட்ட கேட்டுக்குங்க.. உறுதியாக நின்ற செந்தில் பாலாஜி.. சுத்தவிட்ட "தம்பி".. அரண்டு போன டெல்லி
சென்னை: வருமான வரித்துறை சோதனையை செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் சிறப்பாக எதிர்கொண்டு வருகிறார்களாம். முக்கியமாக ரெய்டின் போது அசோக் குமார் நடந்து கொண்ட அதிகாரிகளையே மிரள வைத்துள்ளாதாம்.
இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ரெய்டுகளில் ஒன்றாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு பார்க்கப்படுகிறது. கடந்த 3 நாட்களாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருகிறது. முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் அவருக்கு நிறைய உறவினர்கள் உள்ளனர். நெருக்கமான சொந்தங்கள் உள்ளனர். கட்சி நிர்வாகிகள் தாண்டி ரத்த சொந்தங்கள் அதிகம் உள்ளனர். அங்கே செந்தில் பாலாஜியின் பினாமிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், நெருக்கமான சொந்தங்களிடம் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என்றும் கருதி அங்கே அதிகாரிங்கள் 100க்கும் மேற்பட்டோர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தம்பி: செந்தில் குமார் தம்பி அசோக் குமார் வீட்டிலும் இதேபோல் ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. அவர் வீட்டில் முதல் நாளே ரெய்டு முடிந்துவிட்டது. இரண்டாம் நாள் சென்று சில ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். இரண்டு நாட்களுமே அசோக் குமார் சம்பவ இடத்திலேயே இல்லை.
ரெய்டு வருவது காலையில் தெரிந்து உடனே கரூரை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவர் வீட்டிற்கே வரவில்லை. அதோடு அவர் கரூரிலும் இல்லை. வீட்டிற்கு வந்த அதிகாரிகள் போன் செய்ததில்.. நான் ஊரில்... நீங்கள் எடுக்க வேண்டியதை எடுத்துவிட்டு செல்லுங்கள் என்று அசால்டாக சொல்லி இருக்கிறார் செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமார்.
இது செந்தில் பாலாஜியின் ஸ்டைல் ஆகும். அவரும் இதேபோல்தான் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் நடந்த ரெய்டின் போது தேர்தல் பணிகளில் பிசியாக இருந்தார். அப்போதும் அவர்.. நான் நேரில் எல்லாம் வர மாட்டேன். எதையாவது எடுத்தால் என் அம்மாவிடம் எழுதிக்கொடுத்துவிட்டு செல்லுங்கள். ஏதாவது கையெழுத்து வாங்க வேண்டும் என்றால் அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொள்ளுங்கள், என்று கூறியுள்ளார். அதைத்தான் இந்த முறை தம்பியும் சொல்லி இருக்கிறாராம். இவர்களின் செயலால் டெல்லி தரப்பே கொஞ்சம் மிரண்டு போய்தான் இருக்கிறதாம்.
ரெய்டுக்கான காரணம் என்ன? போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. பல்வேறு டெண்டர் முறைகேடுகளை செய்ததாக செந்தில் பாலாஜி மீது பாஜக, அதிமுக சார்பாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின் எச்சரிக்கை:
இந்த நிலையில்தான் இந்த ரெய்டு குறித்து முன்பே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை அழைத்து.. லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள்.
கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி உள்ளார். முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்டவர்களை அழைத்து பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. முதல்வரின் எச்சரிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ரெய்டுக்கு தயாராக இருந்ததாகவே கூறப்படுகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications