சாமானியர்களின் மெர்சிடஸ், ஜாக்குவார் கனவுகளை நிஜமாக்கிய ‘சென்னை வெள்ளம்’!
சென்னை: சென்னை வெள்ளப் பாதிப்பால் பலரின் ஆசைகள் நிஜமாகியுள்ளன என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அது தான் உண்மை. கார் பிரியர்கள் பலரின் கனவுகளை நிஜமாக்க உதவியிருக்கிறது சென்னை வெள்ளம்.
கடந்தாண்டு இறுதியில் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழையில் சிக்கி வெள்ளக்காடாக மாறியது. இதனால் பல்வேறு இடங்களில் உயிர்ச்சேதமும், பரவலாக பொருட்சேதமும் ஏற்பட்டது.
கடந்த கால சேமிப்புகளை அழித்து, பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது இந்த வெள்ளம். சிறுகச் சிறுக சேமித்ததையெல்லாம் வெள்ளம் அடித்துக் கொண்டு போனது.
ஆனால், இந்த வெள்ளத்தால் சிலரின் கார் கனவு நிஜமாகியுள்ளது.

வரலாறு காணாத வெள்ளம்...
கடந்தாண்டு டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னையின் பல பகுதிகள் இரண்டு, மூன்று நாட்கள் வெள்ளத்தில் மூழ்கின. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள், உயரமான கட்டிடங்களில் தஞ்சமடைந்தனர்.

நீரில் மூழ்கிய வாகனங்கள்...
பெரும்பாலும், அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் அடித்தளம் கார் பார்க்கிங்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கின.

பலத்த சேதம்...
கிட்டத்தட்ட ஒரு வார காலம் நீரில் ஊறிய வாகனங்கள் கூட உண்டு. அவற்றையெல்லாம் உடனடியாக சரி செய்ய இயலாததால் பலத்த சேதத்தைச் சந்தித்தன வாகனங்கள்.

விற்பனை முடிவு...
சிலர் பெரும் தொகை செலவழித்து தங்களது வாகனங்களை சரி செய்து விட, பலரோ கிடைத்த விலைக்கு வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை விற்றுவிடவே முடிவு செய்தனர். காரணம் வெள்ள நீரில் மூழ்கிய வாகனங்கள் இப்போதைக்கு சரி செய்யப்பட்டாலும், எதிர்காலத்தில் தொடர்ந்து அவை பிரச்சினை தரும் என்பது தான்.

அடிமாட்டு விலை...
இவ்வாறு விற்பனைக்கு வந்த கார்களில் குறைந்த விலை கொண்டவை முதல் அதிக விலை கொண்ட கார்கள் வரை விதவிதமானவை அடக்கம். அதிலும் குறிப்பாக விலை உயர்ந்த கார்கள் பல அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன.

ஜாக்குவார்...
அதிலும் குறிப்பாக சுமார் 2.2. கோடி ரூபாய்க்கு விற்கப்படும் ஜாக்குவார் எப் டைப் கார்கள் வெள்ளத்தில் சிக்கி, வெறும் 15 முதல் 25 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கனவுக் கார்கள்...
இதனால், நீண்ட காலமாக இந்த வகைக் கார்களை எல்லாம் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என ஏக்கப்பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தவர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களது கனவு கார்களை மிகக்குறைந்த விலைக்கு வாங்கத் தொடங்கியுள்ளனர்.

80,000 வாகனங்கள்...
இந்த வெள்ளத்தின் போது சுமார் 80 ஆயிரம் வாகனங்கள் சேதமடைந்தது. இதில் சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் மீண்டும் பயன்படுத்தவே இயலாத அளவிற்கு சேதமானது குறிப்பிடத்தக்கது.

லம்ப்பாக வாங்கும் டெல்லிவாலா..
டெல்லியைச் சேர்ந்த ஆட்டோவேர்ல்ட் என்ற யூஸ்ட் கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான தினேஷ் பதானியா கூறுகையில், ‘இதுவரை 500 கார்களை வாங்கி விற்றுள்ளேன். இதில் 100 கார்கள் வரை மெர்சிடிஸ்,ஆடி கார்கள் ஆகும்' என்றார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications