30 கோடிக்கு எங்க போய் முட்டுவது.. தலையை உடைத்துக் கொண்டிருக்கும் சசிகலா குடும்பம்!
சென்னை: சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ. 30 கோடி அபராதத் தொகையை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளதாம் சசிகலா குடும்பம்.
அபராதத் தொகையைக் கட்டிய அடுத்த நிமிடமே, இதை எப்படித் திரட்டினீர்கள் என்று கணக்கு கேட்டு வருமான வரித்துறை வந்து நிற்கும் என்பதால் அதை எப்படி சமாளிப்பது என்பதுதான் இவர்களின் மிகப்பெரிய கவலை + குழப்பமாக உள்ளதாம்.
இதனால் இந்தப் பணத்தை எப்படி கட்டுவது. கட்டினால் சிக்காமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி என்பது குறித்து நடராஜன் மற்றும் சசிகலா ஆகியோர் வக்கீல்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளனராம்.

தலைக்கு ரூ. 10 கோடி
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ. 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் தற்போது பெங்களூ சிறையில் கம்பி எண்ணிக் கொண்டுள்ளனர்.

30 கோடிக்கு எங்கு போவது
நடராஜன், சசிகலா குடும்பத்துக்கு பணத்திற்குப் பஞ்சம் என்று சொன்னால் அதை அந்த பஞ்சம் கூட நம்பாது. இருப்பினும் இது கோர்ட் விவகாரம். கட்டும் பணத்திற்குக் கணக்கு காட்டியாக வேண்டும். இல்லாவிட்டால் வருமான வரித்துறை சும்மா விடாதே.. எனவேதான் பத்து பைசா என்றாலும் கூட கணக்கு வேண்டுமே என்ற கவலையில் உள்ளதாம் சசிகலா குரூப்.

வக்கீல்களுடன் ஆலோசனை
இதுதொடர்பாக நடராஜன் ஒருபக்கம் வக்கீல்களுடன் விவாதித்துக் கொண்டுள்ளார். மறுபக்கம் தனது வக்கீல்களை சிறைக்கு வரவைத்து சசிகலாவும் ஆலோசித்துள்ளார். அதில் பணத்தைப் புரட்டுவது தொடர்பாக பல்வேறு உபாயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாம்.

சிக்கல்தானாம்
கணக்குக் காட்டக் கூடிய வகையில் எந்தத் தொழிலும் இவர்களிடம் இல்லை. எனவே 30 கோடி பணத்தையும் கட்டுவது பெரும் சிக்கலாக உள்ளதாம். கணக்குக் காட்டும் வழி குறித்து இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்களாம். பணத்தைக் கட்டாவிட்டால் கூடுதலாக ஒரு வருடம் கம்பி எண்ண வேண்டும் என்பது முக்கியமானது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications