அரசியல்வாதியாக இருக்க வெட்கப்படுகிறேன்.. திமுக எம்எல்ஏ வேதனை

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரசியல்வாதியாக இருக்க வெட்கப்படுகிறேன் என்று, திமுகவை சேர்ந்த மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தியாகராஜன் டிவிட்டரில் வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அனிதா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து இவ்வாறு அவர் தனது கருத்துக்களை தொடர் டிவிட்டுகள் மூலம் நேற்று வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்த வலிமிகுந்த அவரது கருத்துக்களின் தொகுப்பை பாருங்கள்.

தப்பான முடிவு

18 மாதங்கள் முன்பு எனது தொழில்முறை வாழ்க்கையை கைவிட்டு, பொதுச்சேவைக்காக அரசியலுக்கு வந்தேன். இன்று முதல் முறையாக, எனது முடிவு தவறோ என கருதுகிறேன்.

அரசியல்வாதிகள் கரங்களில் ரத்தம்

அனிதாவின் ரத்தம் அரசாங்கத்தை நடத்தும் அரசியல்வாதிகள் கைகளில் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்தவராக இருப்பினும், அரசியல்வாதி என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

வேதனை புரிகிறது

2 இளம் குழந்தைகளின் தந்தை என்ற அடிப்படையில், அனிதாவின் பெற்றோர் படும் வேதனையை உணர முடிகிறது. நம்பிக்கையின் தீபத்தை அவர்கள் இழந்துள்ளனர். இந்த பெருந்துயரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியது. கடந்த மார்ச் மாதத்திலேயே மாணவர்களுக்கு தெளிவை கொடுத்திருக்க முடியும்.

முறைகேடு

மத்திய மாநில அரசுகள் ஆகஸ்ட் மாதம் நடுபகுதி வரையில் குழப்பத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தெளிவை வழங்கவில்லை. முடிவுகளை எடுப்பதில் திறமையில்லை. இப்போது இருப்பிட சான்றிதழ் விவகாரத்திலும் பெரும் முறைகேடு நடந்துகொண்டுள்ளது. இவ்வாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+